விடிவு

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து
தேயுதலை தேய விட்டு -தேயாது
உடல் வருந்தி உழைத்து
ஊனை உறக்கமாக்கி
உறங்கலினை ஊனமாக்கி
உணர்வுகளை உறையவைத்து
உறைதலுள்ளும் உறையாமல்
வேகத்தை வெறியாக்கி-உதிரத்தால்
சாயமிட்டு உச்சரிக்க மறுக்கும்
உயிர் வலிக்கும் தருணங்களில்
கசிகின்ற கடைக்கண்ணீரில்
கரைந்திருக்கும் தவிப்புக்களின் மூலக்கூறுகள்
சேலைத்தலைப்பில் முடித்து-இடுப்பில்
செருகியசதங்கள் போல உறவுகள்
தாலிக்கயிற்றில் சம்பந்தம் இல்லாமல்-கொழுவிய
பாதுகாப்பு ஊசிகள் போல நண்பர்கள்-இந்த
ஊனமுற்ற உறக்கத்தில் இருந்து விடிவு என்றோ??