கண்ணையா

கண்ணையா !
என் பகல் தூக்கம் போனது
உன் நினைப்பு திருகிவிடும் போதெல்லாம்...!

கண்ணையா !
என் உடல் முழுதும் விழிகளாயின
உன் அருகே வரும்போதெல்லாம் ...!

கண்ணையா!
பூத்து விட்ட பனி புல்வெளி போல்
பூத்துவிட்டதே உன் முகமெல்லாம் ...!

கண்ணையா!
உன்னை நினைக்க நினைக்க
இதயமாகுதே என் விழியெல்லாம்...!

கண்ணையா!
இலைகளோடு பூக்கும் கிளைகள்
பூத்துக் குலுங்குதே மனமெல்லாம்...!

கண்ணையா!
புனிதமானது உன் காதல்
உன்னை நேசிக்கும் போதெல்லாம் ...!

கண்ணையா!
நீ துரத்தில் இருந்தாலும்
என் அருகிலே நினைவெல்லாம் ...!

எழுதியவர் : தயா (27-Oct-13, 7:59 pm)
Tanglish : kannaiyya
பார்வை : 80

மேலே