கனவுகள் ,நினைவுகள்
மனதின் நெருடல்கள் நினைவுகள்.
நினைவுகளின் மலர்ச்சி ,
மறக்க வொண்ணா கனவுகள்.
கனவுகளின் காட்சி,
கானல் நீரின் சாட்சி.
வாழ்வின் ஒய்யாரம் ஓங்கு புகழ் மட்டுமே.
ஒளி கிடைத்தபின்னும்,
வழி தெரியாக் காரணத்தால்,
சேரும் இடம் தெரியாமல் விழிகின்றோம்.
வாழ்க்கை விதி வசம் என்றில்லாமல்
நம் வசமே என்று கொண்டு,
கனவுகளையும்,நினைவுகளையும்,
ஒதுக்கி வைப்போம்,ஓய்வு கொடுப்போம்