உடலுறுப்பு தானத்தால் உயர்வாய்

உலகத்தில் மரணமில்லா
உண்மையான வாழ்வு எய்த
உயிர் போன பிறகும்
உனது
உடலுறுப்பு தானம் செய்வாய் !
காட்சிகள்
கண்டுகளித்து
கற்பனைகள் பல புனைந்த
கண்களைத் தானம் செய்வாய்
கடவுளுக்கு ஒப்பாவாய் !
சிறுமையிலும் பெருமை கொள்வாய்
சிறுநீரகத் தானம் செய்தால் !
சீரும் குருதிக் கொடை கொடுத்தால்
சிறப்பாகத் திகழ்ந்திடுவாய் !
இன்றியமையாத
இதயத்தை நீ
இறக்குமுன்னே தானம் செய்தால்
இயற்கை எய்தாமல் என்றென்றும்
இப்பார் போற்ற வாழ்ந்திடுவாய் !