இழந்து விட்டேன்

கண்திறந்து பார்த்தேன்
காணவில்லை எதையும்
கண்ணீர் மட்டும்
சிந்தியது என் கண்கள்

வார்த்தையின்றிக்
காத்திருந்தேன் விடிவுக்காய்
காணவில்லை எதையும்
காலமும் கடந்து விட்டது

கவித்துளிகள் வந்து கொட்டின
எழுதமுடியவில்லை
அனைத்துமே இருளாக
இழந்து விட்டேன்
என் கண்களை........

எழுதியவர் : பர்ஹா முனீர் (28-Oct-13, 8:49 am)
Tanglish : izhandhu vitten
பார்வை : 157

மேலே