புவியில் தேவனாய் வாழ
அச்சம் புதை,
வாய்மையை பேசிடு!
குறைகள் களை,
சூழ்நிலை மாற்றிடு!
அன்பாய் நட,
அனைவரையும் போற்றிடு!
ஒழுக்கம் கடைபிடி,
உயர்வாய் வாழ்ந்திடு!
நேர்மையாய் உழை,
வெற்றியை பெற்றிடு!
வீரம் கொண்டிரு,
மடமையை கொன்றிடு!
அறம் செய்,
உயிர்களை நேசித்திடு!
போதை தவிர்,
பொலிவுடன் விளங்கிடு!
மனிதநேயம் கொள்,
மனதினில் அமர்ந்திடு!
சாதிகள் ஒழி,
சமத்துவம் போற்றிடு!
கொள்கைகள் மேற்கொள்
புகழினை எட்டிடு!
இயற்கையை நேசி,
மரங்களை நட்டிடு!
நிலையாய் இரு,
நீடோடி வாழ்ந்திடு!
நிலையற்ற பூமியில்,
நிலையான கொள்கைகள் கொண்டு,
பூமியை சொர்க்கமாக மாற்றி,
நாம் தேவர்களாக வாழ்வோம்!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....!