முறைபடுத்திய திருமணம்

நான் ஏற்றவும் இல்லை!
மரபுகளை முறிக்கவும் இல்லை!
வாள் வீச பயிலவுமில்லை!
வாலோனை தூதுக்காய் அனுகியதும்மில்லை !

மதம் கொண்ட யானை,
அடக்க முடியாத குதிரை,
முரட்டுத்தனமான காளை,
இவற்றோடு களம்புகவும் இல்லை!

பளு தூக்குதல்,
தடியனோடு குஸ்தி,
கவிஞனோடு போட்டி - என்பலசோதனை சுற்றுகளை கண்டதும்மில்லை!

கொஞ்சமாய் காதல் நுரைதள்ள அடி,
காதலை மெய்ப்பிக்க மெய்வருந்த
எழுதும் குறுதிமடல்கள்!

கண் இமைக்கும் தூரத்தில்,நேரத்தில்
காதலி கடந்து செல்வாள் -என
ஒலி நூற்றாண்டுகளாய் ஒற்றைக்காலில் தவம்!

காதலி மட்டுமே தேவதையாய்,
மற்ற அனைவரும் அரக்கர்களாய்!

தெரிந்தே,
நரக நெருப்பில் கால்புதைத்து,
அருகம்புல் மாலையனியும் கதை........-காதல்!

ஐய்யகோ காதலை நினைக்கும்போதே,
ஆபத்துமணி மூலையில் சத்தமாய்!

நலம் தெரிந்து,காலம் பார்த்து,உயரம் பார்த்து,உள்ளமும் பார்த்து,ஏனைய எல்லா பொருத்தங்களும் பார்த்து,நாள் குறித்து, அழைப்பிதழ்களை அழகாய்அச்சடித்து,
மங்கலமாய் மஞ்சள்ளிட்டு,
அனைவரையும் ஒருங்கினைத்து!

பெற்றவர்கள்,கண்ணே,மணியே - என
பொத்தி, பொத்தி வளர்த்த பொக்கிஷத்தை
மணவாளன் கை சமர்பிக்க!

பெற்றவர்கள் பெருமையில்,
ஆன்றோர்களின் ஆசியோடு,
சான்றோர்களின் சம்மதத்தோடு,
நண்பர்களின் வாழ்த்து பெற்று ,
கரகோஷங்கள் வின்பிளக்க!
நலமாய் தொடங்குமே வாழ்க்கை
முறைபடுத்திய திருமணத்தில்!

எழுதியவர் : -நவீன் மென்மையானவன் (15-Jan-11, 2:15 am)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 544

மேலே