இனிக்கவில்லை இந்த தீபாவளி

எங்களின் தீபாவளி
ஒரு மாதத்திற்கு
முன்பே தொடங்கிவிடும்

காலண்டரின் தேதி
கிழிகையில்
மனதில் நாட்களின்
எண்ணிக்கை குறையும்

வகுப்பிலும் தெருவிலும்
வாங்கும் பட்டாசும்
உடுத்தபோகும் ஆடையின்
பேச்சாயிருக்கும்

தூப்பக்கியே
எங்களின்
தீபாவளி
தொடங்கிவைக்கும்

அப்பாவுடனும்
அம்மாவுடனும்
தொடங்கும்
எங்கள் பட்டண பிரவேசம்

அம்மன் சந்நிதியுளும்
விளக்குதூண்களில் தொடங்கும்
தேடல் வேட்டை
செலக்சன்
ஹாஜி மூசாவிலும்
வந்து முடியும்

எனக்கும் பேண்ட் வேணும்
என கேட்டுக்கும்
தம்பியின் அழுகை
கரும்பு சாறில் சமாதான படுத்தப்படும்

அந்த புதிய வாசனை
முகர்ந்து பார்க்க
திட்டுகளை பொருத்து கொண்டு
எடுத்து எடுத்து பார்போம்
அலமாரியில் இருந்து

முறுக்கு பிழிகிறேன்
என்று எண்ணெய்
சுட்டதும் வலிக்கவில்லை

சாமிக்கு வைக்காமல்
தரபடுவதிலை தின்பண்டங்கள்
ஆயினும்
வெண்ணை திருடிய கண்ணாய்
முறுக்கு திருடினோம்

என்றும் சோம்பலாய்
எழும் நாங்கள்
அன்று மட்டும்
சூரியனக்கு முன்பாய்
கண் விழிப்போம்

எண்ணெய் குளியலுமாய்
வேகும் கறி மணமாய்
தீபாவளி தொடங்கும்

மாமன் கைபிடித்து
சரஸ்வதி
லட்சுமி
பொருளாதார தடை விதிக்காத
அணுகுண்டுகளை
வெடித்து மகிழ்ந்தோம்

தெருவெங்கும்
குப்பையாய்
அடுத்தநாள்
வெடிக்காத வெடி தேடி
வீதியில் திரிந்தோம்

அத்தையும் மாமனும்
சித்தியும் சித்தப்பாவும்
தாத்தாவும் பாட்டியும்
என
சந்தோசமாய் கொண்டாடிய
தீபாவளி அது
அந்த சந்தோசத்தின்
அடையாளமாய் இன்றும்
கையில் உண்டு
வெடி வெடித்த தழும்பு

அன்று
சொந்தங்கள் சூழ
உண்டும்
வெடித்தும்
அந்த தீபாவளி
நினைவாய் மட்டுமே

இன்று
அடுக்குமாடி குடியிருப்பில்
என் குடும்பமாய்
தனித்து கொண்டாடுகையில்
இனிக்க வில்லை
இந்த தீபாவளி !!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது ) (29-Oct-13, 10:12 am)
பார்வை : 134

மேலே