உலகம் இவ்வளவு தான்
காட்டினதைப் பார்த்தேன்
மிகுந்த சங்கடத்துடன்
பேசினதைக் கேட்டேன்
மிகுதியான வருத்தத்துடன்
நடந்ததைக் கண்டேன்
மிகவும் நெருக்கடியுடன்
நெஞ்சில் ஒரு பதைப்பு
பிடித்துக் கொண்டேன்
கண்ணிலே நீர்
சுண்டி விட்டேன்
குமறி வந்த
உணர்ச்சிகளை அடக்கி
நிலை குலையாமல்
வெளியே வந்தேன்
எப்படி என்று தெரியாமல் .
மனிதர்கள் பல விதம்
நான் அறிந்த வகையில்
நல்லவர்கள் மிகக் குறைவு
நல்லவர அல்லாதவர்கள்
என்று அறி வது மிகக் கடினம்
கண்டு கொண்டேன் மக்களை
முன்னால் பெருமை பேசி
பின்னால் கேலி செய்வதும்
புறம் பேசுவதும் நகைப்பதும்
இன்னல் விளைவிப்பதும்
இல்லாததைச் சொல்வதும்
வாழப் பொறுகாதவர்களும்
இருகிறார்கள் என்று தெளி ந்து
உலகம் இவ்வளவு தான்
என்று புரிந்து கொண்டேன்.