காதல் இதுதானோ-5
நான்கு நாள் பட்ட வேதனை நெஞ்சை பிழிய, தோற்றாலும் கவலை இல்லை அவனிடம் பேசினால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் மது..
“ஹலோ!”
மறு பக்கம் பதில் ஏதும் இல்லை அவனிடம்..
மீண்டும் அவளே பேசினாள்..
“ஹலோ.. டா.. நான் பேசுறது கேக்குதா?”
பேச்சு வராமல் மூச்சடைத்து நின்றிருந்தான் அவன்.. இவ்வளவு பெரிய சந்தோஷத்தை கடவுள் ஒரே நொடியில் கொடுத்து விட்டானே என்று நெகிழ்ந்தான்.. அவள் குரல் கேட்டபடியே சாய்ந்து நின்றான் மாடி படிகளில்..
“இந்த விளையாட்டு எனக்கு பிடிக்கல.. இப்பவே நிறுத்திக்கலாம்..”
செய்வதறியாது பிதற்றினாள் மது.. மீண்டும் புதிதாய் ஜெனித்தவனாய் பேச தொடங்கினான் அவன்..
செல்லமே..
“நான் தோற்று விட்டேன்.. ஒத்துக்கிறேன்..”
நீ தோற்க வில்லை கண்ணே.. ஜெயித்திருக்கிறாய்... உன் அன்பில் தோற்றவன் நான் தான்..
விழிகள் கண்ணீர் திரையால் மறைக்கப்பட கைகுட்டையால் துடைத்து விட்டு பேசினாள் மது..
“என்னால உங்கிட்ட பேசாம இருக்க முடியாது டா.. காரணம் தெரியல.. ஆனால் இது தான் உண்மை..”
நீ பேசாமல் இருந்து விடுவாயோ என்று நான் கூட பயந்து கொண்டே இருந்தேன்... ஆனால் நல்ல வேளை நம் காதல் ஜெயித்தது..
“ஒரு வேளை நான் பேசாமல் இருந்திருந்தால்??”
நான் செய்த சத்தியம் தானே.. சத்தியங்கள் உடைக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருப்பேன்..
“அடப்பாவி.. சரியான கள்ளன் நீ..”
வேறு என்ன செய்ய முடியும்.. என்னால் என் மனைவியை அக்கா என்றெல்லாம் அழைக்க முடியாது..
“போதும்.. போதும்..”
சரி.. தோற்று விட்டாய் அல்லவா? இப்போது ஒத்துகொள் உன் காதலை..
“என்னால் முடியாதுடா.. சொல்வதை புரிந்து கொள்..”
ஏமாத்தாதே மது..
“அது தான் என் பயம்.. எங்கே உன்னை ஏமாத்தி விடுவேனோ என்ற பயம்.. நண்பன் என்று சொல்லி உன்னை வீணாக என் பின்னால் அலையவிட விருப்பமில்லை..”
நல்லது.. கணவனாக ஏற்று கொள்..
“காதலன் என்று சொல்லி இறுதியில் கைவிடவும் விருப்பம் இல்லை..”
நீ என்னை கைவிட மாட்டாய்..
“இதில் என் முடிவு மட்டும் இல்லை.. நம் பெற்றோர் இருக்கின்றனர்.. உறவினர்கள் இருக்கின்றனர்..”
இது நம் வாழ்க்கை.. அவர்களா நம்முடன் வாழ போவது??
“வெறும் கணவனும் மனைவியும் மட்டுமல்ல குடும்பம்.. நம்மை பெற்றவர்களும், இன்ப துன்பங்களில் பங்குபெறும் உறவினர்களும் இணைந்தது தான் குடும்பம்..”
மீண்டும் மீண்டும் என்னை காயப்படுத்தாதே மது..
“நான் மட்டும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்று நினைக்கிறாயா??”
தன்னை உயிராய் நேசிப்பவள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது அவனுக்கு வலியை தந்தாலும், அவள் படும் துயரமும் அவனால் உணர முடிந்தது..
எப்போதும் சிரித்த முகத்துடன் துள்ளி விளையாடும் அவள், துவண்டு போய் நிற்பது அவனை கவலை கொள்ள செய்தது...
உன் பெற்றோர் சம்மதம் வாங்குவது என்
பொறுப்பு..
“தலைகீழாய் நின்றாலும் அது நடக்காதுடா.. அவர்களை பற்றி எனக்கு தெரியும்..”
சரி மது.. இன்று முழுவதும் யோசி.. நாளை பேசலாம்.. அப்போது நீ சொல்ல போகும் வார்த்தை தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்..
தொடரும் காதல் பயணம்.. :)