பதினாறு

அறியாத வயதில்
அலைந்துதிரியும் மனதில்
அலையாய் அடிக்குதே
அழகான காதல்..

ஆசைகள் அருவியாய்
ஆதரவாய் அருகில் நீ
ஆனந்தமாய் நடக்குதே
ஆழமான காதல்..

இனிய இளமையில்
இதயம் இளக
இன்னதென தெரியாத
இனிமை காதல்..

ஏதேதோ நடக்க
எத்தனையோ கேள்விகள்
எண்ணி பார்பதற்குள்
எட்டாத தூரத்தில் நீ..

காதலை சுமந்துகொண்டே
காலங்களை கடந்துவந்து
கண்ணகியாய் காத்திருக்கிறாள்
காணாத கோவலனுக்காய் ..

எழுதியவர் : பிரியா கண்ணன் (29-Oct-13, 11:45 pm)
Tanglish : patinaaru
பார்வை : 118

மேலே