பளிச்சிடும் நிலவு

பிறை நிலவும்
வானில் அழகுதான்
உரைக் கவிதையும்
தமிழில் அழகுதான்
முழுமை இல்லாவிடினும்
குறையொன்றுமில்லை
பாரதி வகுத்த பாதை
கவிதையில் புதுமை
பாதியானாலும் மீதியாளாலும்
பளிச்சிடும் அங்கே நிலவு !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (30-Oct-13, 8:35 am)
Tanglish : palichidum nilavu
பார்வை : 76

மேலே