யார் மனிதன்

பிறந்தோம், நன்றாக கற்றோம், நல்ல தொழில் ஒன்றை செய்கிறோம், இனிமேல் திருமணம், குழந்தைகள், பேரன்கள், அத்தோடு மரணம்

இந்த நேரசூசியில் இயங்குபவனா மனிதன்? இப்படி சுயநலத்தோடு வாழ்வது தான் வாழ்க்கையா?

அப்படியென்றால் தெரிவோர குழந்தைகள் எல்லாம் நாம் இப்படி ஆகக் கூடாது என்று எண்ணும் வெரும் உதாரணங்களா?

27 வயது தாண்டியும் திருமணம் ஆகாத பெண்கள் எல்லாம், நீங்கள் கை தட்டி விளையாடும் பொம்மைகளா?

என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்,,

அன்னை தெரேசாவின் சேவையா? இல்லை மகாத்மா காந்தியின் சேவையா? என்று பட்டிமன்றம் வைப்பதை நிறுத்தி விட்டு

ஆயிரம் கிடைத்தால் ஐம்பதையாவது தர்மம் செய்து உங்களின் சேவையையும் மற்றவர் விவாதம் செய்யுமளவு கொண்டு வர முயற்சியுங்கள்..,

எழுதியவர் : ஹனாப் (31-Oct-13, 11:12 am)
Tanglish : yaar manithan
பார்வை : 360

மேலே