மணியோசை
மணி....
நம் வாழ்வில் இணை பிரியாமல் கடைசிவரைக்கு வருகிறது
நாம் பிறந்ததும் நம் பெற்றோர் கோவிலில் மணி அடித்து கவுளுக்கு நன்றி சொல்கின்றனர்,
நாம் தொட்டில் குழந்தையனவுடன் கிலுகிலுப்பையால் மணிஓசை எழுப்பி நம்மை மகிழ்விக்கின்றனர்,
மணி அடித்ததும் பள்ளியில் வகுப்பு தொடங்குகிறது,
மணி அடித்ததும் காலையில் எழவேண்டியதுள்ளது,
மணி அடித்ததும் விடுதியில் சாப்பாடு கிடைக்கிறது,
மணி அடித்ததும் விடுதியின் அறையில்படிப்பு தொடங்குகிறது
மணி அடித்ததும் அலுவலகத்தில் வேலை தொடங்குகிறது,
மணி அடித்ததும் தொலைபேசியில் பேசவேண்டும்,
மணி அடித்ததும் வங்கியில் காசாளரிடம் செல்லவேண்டும்,
மணி அடித்ததும் கோவிலில் இறைவனை தொழவேண்டும்,
இதே மணியோசை நாம் இறந்தபின் சோகமாக நம்மை வழி அனுப்புகிறது ஆனால் இந்த கடைசி மணியோசையை நம்மால் கேட்டக முடியாது,
மணி.....
வாழ்வில் இணைபிரியாதது, என்று ஆங்கிலேயனும் பணத்தை மணி என்றானோ.....