சமைத்திடு பெண்ணே

பெண்ணே பெண்ணே வா! வா!
சமைப்போம் வா! வா!
பெண்ணியம் என்னும் ஆற்றலை
அடுப்பாக்கி சமைப்போம் வா!
கல்வி என்னும் அறிவை
சுவையாக சமைப்போம் வா!
கனியாத் தமிழை பதப்படுத்தி
பருகிடச் சமைப்போம் வா!
சமைத்திடு என்றும் சமைத்திடு
சமுதாயத்தை கல்வியால் சமைத்திடுவோம் வா!

எழுதியவர் : பூபதி கண்ணதாசன் (31-Oct-13, 11:22 am)
பார்வை : 75

மேலே