மழையின் காதல்

அன்பினை மேகமாக்கி
வான் பொழிந்திடும் தூறல் !!
தாங்கி கொள்ளும் இலைகள்
தாண்டி செல்லும் துளிகள்!!
தீண்டலை தாண்டிய சந்தோஷங்கள்
மழைத்துளிகளுடனான மண்ணின் பயணம்!!
சேருமிடமறியாது தேங்கிய ஓர் இடத்தில் வாழ்க்கை!!
முழுவதுமாய் மழையின் காதல்
மண்ணால் கிரகித்து கொள்ளப்பட்ட
சந்தோஷத்தின் முழு உடுருவல்!!
மழை நின்ற பிறகும்
மண் மீதான காதலை
மழைத்துளிகள் நிறுத்தவில்லை!!
தான் சுமந்த கடைசி தூறலையும்
மண்ணிற்காக தியாகம் செய்யும் இலைகள்!!!