பாசமா வேஷமா

இருக்கும் போது

நீ வைத்துக் கொள்வதா
நான் வைத்துக் கொள்வதா
முதியோர் இல்லத்தில்
சேர்ப்பதா என்று போட்டி

இறந்த பின்னோ

நினைவு நாளுக்கு
அது பிடிக்கும் இது பிடிக்கும்
என்று செய்து வைத்து
படத்துக்கு முன் படையல்

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (31-Oct-13, 8:36 pm)
பார்வை : 209

மேலே