கடவுள் இருக்கிறாரா இல்லையா
பால் குடிக்கும்
பச்சிளம் குழந்தை
என்ன பாவம் செய்தது
கடவுள் அதையும்
வதைக்கிறாரே...
குழந்தையே !!
உன் வலி என்ன என்று
உணர்ச்சி உள்ள
எனக்கு புரிகிறது...
ஆனால் உருவமில்லா
கடவுளுக்கு புரியவில்லையே...
உன்னை முதலில் பார்த்ததும் எனக்கு
கவிதை வரவில்லை
கண்ணீர் தான் வந்தது
என் செல்லமே...
உனை
திரும்பத் திரும்ப பார்த்த
என் கண்களில்
கண்ணீர் வரவில்லை
மாறாக
இரத்தம் தான்
வருகின்றதென்றால்
உன் தாய்க்கு
எவ்வளவு வந்திருக்கும்...
உன் ஆறுதலுக்காகச்
சொல்லவில்லை
உனக்குதவ
ஒரு கரம் இல்லை
ஓர் ஆயிரம் கரங்கள்
உன்னைத் தேடி வரும்...
இது போல தருணத்தில்
எனக்கு கேட்கத் தோன்றுகிறது
கடவுள் இருக்கிறாரா
இல்லையா
என்ற கேள்வியை...