மகளைப் பெற ஆசைப்படுங்கள்
நதியலையில் நீந்தி வந்து
நாணாமல் எனைப் பார்க்கும்
சிறு மீனாய்!...
இலைகளிடை தனை மறைத்து
விளையாடும்
ஒரு மதியாய்!...
என் தாயின்
மறு நகலாய்!...
எதிர் பார்ப்பே இல்லாமல்
எனைப் பார்த்து சிரிக்கிறாள்...
என் மகள்!..
தூங்கும் என் மார்பில் ஏறி
துயில் கலைத்து
விழிகளை திறந்து விளையாடுகிறாள்...
பொம்மையானேன்!...
கைக்குட்டையால்
முகம் மட்டும் மறைத்துக் கொண்டு
கண்டு பிடிக்கச் சொல்கிறாள்...
தோழனானேன்!...
ஐந்து விரல்களில்
இரண்டு பருக்கைச் சோறெடுத்து
என் வாயில் ஊட்டுகிறாள்...
மகனானேன்!...
தனக்கிருக்கும் சிறு மடியில்
என் தலையை துக்கி வைத்து
புரியாத மொழி பேசி
துங்கச் சொல்கிறாள்...
நானும் நடிக்கிறேன் துங்குவது போல...
நடிகனானேன்!...
அடிக்கும் முன்பே
அழுது கொண்டு
கால்களை கட்டிக் கொள்கிறாள்...
கடவுளானேன் !...
அப்பா எனும் சொல்
ஏனோ வரவில்லை!...
அம்மா என்றே
என்னையும் அழைக்கிறாள்!...
தாயுமானேன்!...
எப்போது முடிமோ?..
என்றறியாத வாழ்வில்
எல்லாமுமாக வாழ்ந்து விட்டேன்...
என் இரண்டு வயது மகளால்...
ஆண்களே
மகளைப் பெற ஆசைப்படுங்கள்!...
வரதட்சணை - எனும்
ஒற்றைச் சொல் ஒழித்து...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
