உயிரின் உருவம்

ஆதவனின் அக்னி பார்வை
அணைந்து போன
அழகான மாலை வேளை,,,

நடந்த செல்கிறேன் நான் மட்டும்
எங்கே என்று தெரியாமலே,
என் சொந்த மண்ணில்
நான் நடக்கும் கடைசி நாள்

மேக மூட்டம் என் சிந்தனை போல ,
இடி மின்னல் என் இதயம் போல,
திடீர் மழை... என் கண்கள் போல,

நனைந்து விட்டேன் நன்றாக,
ஒதுங்கி நின்றேன் ஒரு நிழல் குடையில் ,

மின்னல் வெட்டியது ,,,,
என் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும்
கவலையுடனும் கண்ணீருடனும் கடைசியாக
நினைத்து பார்த்துக்கொண்டேன் ..

எவ்வளவு அழகான வாழ்கை
வாழ தவறி விட்டோமே ?

மின்னல் வெட்டியது
என் விழிகள் அழுவதை நிறுத்தி அகல திறந்தது
என் எதிரே நின்ற ஒரு பெண் மின்னலை பார்த்து ,

ஒரு உயிருள்ள மின்னல்
ஆம் ஒரு அழகான பெண் மின்னல் ,

விட்டு விட்டு அடித்த வெளிச்சம்
அவள் முகத்தை தொட்டு விட்டு போனது,
நன்றாக உற்று பார்த்தேன்,,
எங்கோ பார்த்த முகம்,

இடி என் இதயத்தில் விழுந்தது
மழை என் கண்ணில் வழிந்தது,,

துரோகி !!! துரோகி !!!!

ஆம் ,,,,

கண்களால் கவிதை பாடி,
கவிதை மாலை சூடி
என்னை காதல் வலையில் வீழ்த்தி

என் உயிர் உள்ள வரை உனக்காக
மட்டுமே வாழ்வேன் என்று சொல்லி விட்டு ...

மாற்றானுடன் மணவறை ஏறி
என்னை மது கடை ஏற வைத்தவள் ,

கலங்காத கண்களில்
கத்தி வீசி போனவள்

குடி இருந்த இதயத்தில்
குண்டு வீசி போனவள் .

நாளை மீண்டும் வருகிறேன்
என்று சொல்லி போனவள்
என் மரண நாளில்
மீண்டு வந்திருக்கிறாள்...

அவளும் என்னை நன்றாக பார்த்துவிட்டு
தலை குனிந்து விட்டாள்..

கடந்த கால நினைவுகள்,
அவள் கடந்து வந்த துரோகங்கள்
கண்ணில் தெரிந்தது
கண்ணீர் வழிந்தது,

அவள் அழுவதை பார்த்தவுடன்
எனக்கு இப்போது கூட
இதயம் வலித்தது .. ஏனென்று தெரியாமலே,

என் கரம் பற்றி நடந்த அவளது கரங்களை
ஆசையுடன் பார்க்கிறேன்,,

இன்னொரு பிஞ்சு கரத்தை ,
இருக்கமான முகத்துடன் அணைத்து இருந்தாள்

அந்த குழந்தை அசலாக அவளின் நகல்,
அந்த அன்பு கலந்த முகம்,
அவளது குழந்தை பருவமாய் தெரிந்தது
குழந்தையின் கள்ளமற்ற களிப்பில்

மழை போல என் கல் மனம் கரைகிறது
மின்னல் போல இதயம் துடிக்கிறது
அள்ளி முத்தமிட துடிக்கிறது
என் தன்மானம் தடுக்கிறது..

இப்போது உற்று பார்த்தேன்
லேசான மனதுடன் ..
அவள் நெற்றியில் குங்குமம் இல்லை
மழையில் நனைந்திருக்கும்...

கழுத்தில் தாலி இல்லை .
மழையில் ? ? ?

இப்போது புரிந்தது,
அவள் மழையில் நனையவில்லை
வாழ்கை அலையில் நனைந்திருக்கிறாள் என்று ..

எழுத்துக்கள் இல்லாத மௌன மொழியாக
காற்றில் கரைந்து கொண்டிருந்தன
கண்கள் பேசும் எல்லா வார்த்தைகளும்

இப்போது தான் புரிந்தது ,

அவர்களும் என்னை போல
நடந்து வந்தது கடைசி நாள் என்று.

மனசு ஒத்து போன இதயங்களுக்கு
வாழ்க்கையும் ஒரே போல !

இன்றே இருவருக்கும் கடைசி நாள்
ஆம்... நாம் தனி தனியாய் வாழ்ந்ததற்கு.

இருவரது கைகளையும் இறுக பிடித்தேன்,
இணைந்து வாழ்வோம் இனி புதிதாய் .

உணர்ந்தேன் இன்று ....,

காதல் என்பது
உள்ளங்களால் மட்டுமே
உருவாக்கபடும் உன்னதமான
உண்மை உறவு என்று..

இப்போது வானம் லேசாக தெளிந்து இருந்தது
என் மனதினை போல..

எழுதியவர் : ஆதவன் (17-Jan-11, 2:46 pm)
சேர்த்தது : ஆதவன்
Tanglish : uyeerin uruvam
பார்வை : 476

மேலே