தீபாவளி என்ற கொண்டாட்டம்

வெடிகள் ஆயிரம்
சங்கு சக்கரம் கொள்ளு பட்டாசு,
சுருள் பட்டாசு, சர வெடி
கம்பி மத்தாப்பு யானை குதிரை வெடி வகைகள்
இப்படி ஆயிரம்.....
உழைத்தவன் வியர்வை ஒரு நாள் கொண்டாட்டத்தில் கரியாகிறது
மனிதன் மனிதனாகவே உண்டாக்கும்
அழிவின் சாரம்..
பண்பாட்டின் எச்சம்
மகிழ்ச்சியின் உச்சம்
இனிப்பு காரம் வகை வகையாக.....
கொண்டாட்டத்தின் முடிவில்
மகிழ்ச்சியை விட
எதிர்கால தலை முறைக்கு
அழிவின் அபாயம்
காத்திருக்கிறது
ஓசோன் மண்டலத்தில்...
நாம்
படித்தும் முட்டாள்கள் என்பதை
நிருபிக்கும்
ஒரு நாள் தான்
தீபாவளி....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (1-Nov-13, 9:37 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
பார்வை : 162

மேலே