வாழ்க்கை பயணம்

கண்கள் உன்னை நேசிக்கும்;
காமம் கொண்டே சுவாசிக்கும்...
காதலா??? அது பெயர் காதலா???
காமம் கொண்ட காதலினால்;
கனவா காதல் என்றிடுதே...
காதலா??? அது பெயர் காதலா???
உன்னை இங்கே யாசிக்க;
மூச்சாய் உன்னை சுவாசிக்க...
உள்ளதடி!!! தோழமை உள்ளதடி!!!
உடலை தழுவும் உயிராக;
ஒளியில் நிகழும் திறனாக...
உள்ளதடா!!! தோழமை உள்ளதடா!!!
தோழமை என்னும் தோணியிலே;
கற்பனை உலகை எட்டிடலாம்...
தோழனே!!! என்னுயிர் தோழியே!!!

எழுதியவர் : கார்த்திக்... (2-Nov-13, 12:01 am)
Tanglish : vaazhkai payanam
பார்வை : 224

மேலே