தீபாவளி என்றால் என்ன
சரித்திரப் பழமை வாய்ந்த
ஏழையின் மாளிகையில்
சமத்துவம் பேசித் தழுவுது
நிலவின் கதிரின் ஒளிக் கரங்களே !
சரித்திரம் மாற்றிட சூளுரைத்து
வந்தனர் போயினர் ஆட்சியில் பலர் !
புதிதான ஒரு விடியலுக்காக காத்திருக்கிறார்கள்
முடியாத இரவுகளுடன் இங்கே பலர் !
விடியுமா இரவுகள் முடியுமா ?
ஒளி ஏந்தி ஒரு தீபாவளி
இவர்கள் வாசலிலும் வருமா ?
நான்தான் தீபாவளி என்று சொல்லிடுமா ?
சொல்லிடுவீர் தோழமை நெஞ்சங்களே ?
~~~கல்பனா பாரதி~~~