யார் சிரித்தால் தீபாவளி - ஷான்

யார் சிரித்தால் தீபாவளி????

வறட்சியால் வாடும் தருணம்
கார்மேக கருணையினால்
வறட்சி நீங்க மழை சிரித்தால்
உழவனுக்கு தீபாவளி!!!

விரட்டி விரட்டி காதலிக்கையில்
பச்சை கொடி காட்டிவிட்டால்
காதலி சிரித்துவிட்டாள்
காதலனுக்கு தீபாவளி!!!

தேர்தலுக்காய் வாக்கு கேட்டு
வீதி வீதியாய் திரிந்த பின்னே
வெற்றி சிரித்துவிட்டால்
வேட்பாளனுக்கு தீபாவளி!!!

இரவென்றும் பகலென்றும்
படித்த பாடம் தேர்வெழுதி காத்திருக்க
தேர்ச்சி சிரித்துவிட்டால்
மாணவனுக்கு தீபாவளி!!!

குழந்தை இல்லா தம்பதியர்
கோவில் கோவிலாய் வேண்டிய பின்
கொஞ்சும் மழலை சிரித்துவிட்டால்
குடும்பதிற்க்கே தீபாவளி!!!

படுத்த படுக்கை ஆனவனுக்கு
தகுந்த சிகிச்சையான பின்னே
ஆரோக்கியம் சிரித்துவிட்டால்
குனமடைந்தவனுக்கு தீபாவளி!!!

நாளும் நாளும் வேலை தேடி
நடைபிணமாய் திரிந்தவனுக்கு
நல்ல பணி சிரித்துவிட்டால்
பணி கிடைத்தவனுக்கு தீபாவளி!!!

கொலைக் குற்றம் புரிந்த பின்னே
சிறைவாச தண்டனை முடிவில்
விடுதலை சிரித்துவிட்டால்
கொலைகாரனுக்கு தீபாவளி!!!

குறைந்த விலையில் பொருள் வாங்கி
பதுக்கி பதுக்கி வைத்தவனுக்கு
பொருள் மதிப்புயர்ந்து சிரித்துவிட்டால்
பதுக்கல் மன்னனுக்கு தீபாவளி!!!

கடன்காரன் காணாமல் போய்
திரும்ப வந்து கொடுக்கையிலே
மொத்த பணம் சிரித்துவிட்டால்
கடன் கொடுத்தவனுக்கே தீபாவளி!!!

கவிதை எழுத தலைப்பு தந்து
சபைதனிலே வாசித்த பின்
கவிதை நோக்கி பரிசு சிரித்துவிட்டால்
கவிஞனுக்கே தீபாவளி!!!

எழுதியவர் : சொ. சாந்தி (3-Nov-13, 8:57 am)
பார்வை : 127

மேலே