தழைத்திருக்கும் தமிழே தவிப்பு நீக்கு-------அகன்
பழகு மொழியே ,அழகு நாடே,
அன்னை அன்பே , அருமை நட்பே ,
இனிக்கும் இதழே, இன்ப ஊற்றே,
கனியின் ரசமே ,கன்னல் சுவையே.....!
கண்ணின் மணியே , மணியின் ஒளியே ,
ஒளியின் விளைவே ,விளைவின் வீச்சே ,
மண்ணின் உயிரே ,உயிரின் உணர்வே ,
உணர்வின் உச்சமே ,உச்சத்தின் உயர்வே.....!!
முக்கனியே ,முக்கொடியே ,
முக்கடலே , முத்தமிழே ,
தழைத்து வளர்கின்றேன் உன்னால்..உண்மை.
பிழைத்து உயர்கிறேன் உன்னால் -அன்றியும்
பழித்து பரிகசிக்குமோ பைந்தமிழ் உலகு -என ..
விழித்து விம்முகிறேன் சந்துப்பிழைகளால்....!!!
மழையாய் சொற்கள் நாளும்
பொழிந்தென்ன பயன் சொல்.-சந்துப் ......??
பிழையின்றி எழுத வழி அறியேனே.!!
தழைத்திருக்கும் தமிழே தவிப்பு நீக்கு.