28-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம் -கார்த்திக்

தத்துவதரிசனம் (14)

புலன்களை அடக்கி நீ
அடையபோவதுதான் என்ன ?
உன்னை படைத்தவன் என்ன
முட்டாளா, உனக்கு புலன்களை
தந்து அதில் இன்பத்தையும் ஈவதற்கு !!!
அடக்குதலில் ஆன்மிக
பயணம் அமைவதே கிடையாது
மாறாக அறிவதிலும், புரிந்து
தெளிவதிலும் மட்டுமே ஆன்மிகம்
தனது நறுமணத்தையும்,மலர்ச்சியையும்
அடக்கி வைத்துள்ளது !!!

தத்துவதரிசனம் (15)

திட்டம் போட்டு அறவழியில் செல்கிறாய்
ஆன்மிகம் அதில் இருப்பதாக நினைக்கிறாயா?
அப்படியெனில் உலகில் இருள் -ஒளி ,
குளிர்-வெப்பம் ,நறுமணம் -துர்நாற்றம் ,மலர்தல் -உதிர்தல் ,இப்படி இரட்டையாக இருக்கும் நோக்கம்
என்ன என்று ஆராய்ந்துபார் ?
அறம் என்பது இரட்டைகளுக்கு மத்தியில்
பயணிப்பது எந்த எதிர்பார்ப்புமின்றி
பூரணமாக பிறந்து பூரணமாக இறப்பது
மொத்தத்தில் பந்தங்களில் இருந்து உன்னை
அறுத்து கொள்வது !!!

தத்துவதரிசனம் (16)

எப்போதும் இறைதன்மை உருவத்தில்
மட்டும் அடங்கிவிடாது அது ஒரு
சக்தி வாய்ந்த இயக்கத்தின் காரணி
இச்சையை சிறிதுசிறிதாக குறைத்துகொள்
ஆம் ,சிறிதுசிறிதாக ஏனெனில்
இறைத்தன்மையை அறிய நினைப்பதும்
ஒரு இச்சைதான்,ஆகையால் இச்சையை
சுருக்கும் போதெல்லாம் நீ இயக்ககாரணியை
நோக்கி விரிய தொடங்கிவிடுவாய் !!!

************(தத்துவதரிசனம் தொடரும் )***********

என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (3-Nov-13, 11:16 am)
பார்வை : 97

மேலே