கருவின் கதறல்

இருட்டு அறையில் தவிக்கிறேன் தனியாக
என் சொந்தங்கள் எல்லாம் மடியுது மெதுவாக
என்னை பத்திரமாக வயிற்றில் சுமக்கும் தாயே
நீ மட்டும் சுகமின்றி அலைகிறாயே.

திட்டமிட்ட தீவிரவாதங்கள்
திட்டமிடா சவ ஊர்வலங்கள்
தினம் தினம் தீபாவளி இங்கே
ஆனால் கொண்டாட குழந்தைகள் எங்கே?

கல்யாணமாகா கன்னியர்கள் சிலர்
கரு சுமக்க கண்டேன்
இந்த கல்லறை கூடுகலால்
மானம் பெரிதென வாழும் அத்தமிழச்சிக்கள்
உயிர்விட்ட அவலமும் அறிவேன்.

பள்ளிக்கு சென்ற பிள்ளை
பாவம் பாதி உடல்
மண் புதைய கண்டேன்.
தமிழன் என்ற பெயர்ப்பலகையை
நெஞ்சில் சுமப்பதாலா
எங்கள் நெஞ்சை துளைபோடுகிறாய்.

உயிரை கொள்ளும் உயிர்க்கொல்லியே,
உயிருக்கு உன் உள்ளத்தில் என்ன விலை?
எனக்கல்லவா தெரியும் கருவின் கலை.
விலையற்ற உயிர்களை
தீக்குளிக்க வைக்கிறாய்
தீக்குளித்து தீக்குளித்து இன்று நாங்கள்
நெருப்புக்கே நண்பனானோம்.

எத்தனை ஆயுதங்கள் நீ கொண்டு வந்தாலும்,
எத்தனை பிரியாக்களை கற்பழிக்க முயன்றாலும்,
எங்குலத்து பெண்களின் வயிற்றில் கடைசி கரு
இருக்கும்வரை நீ நினைப்பது நடக்காது.

கேடுகெட்ட காமவாதியே!
உன் தாயின் மடியிலே,
தாய்ப்பால் குடிக்கையில்,
காமத்தில் குடித்தாயோ?
தாய் என்றும் ,மகள் என்றும் பாராமல்
கற்பழிக்கும் தரங்கெட்ட தருதலையே.
நீ இப்படியெல்லாம் செய்வாய் என தெரிந்திருந்தால் கருவிலே உன்னை கருக
வைத்திருப்பாள் உன் தாய்.
அவளும் கருகியிருப்பால்
உன்னை சுமந்த பாவத்திற்கு.

என் தமிழச்சிகளே!
ஏன் இன்னும் தாமதம்
கற்பிக்கு பெயர்போன
என்குலத்து கன்னகிகளே!
கணவனுக்காக அன்று மதுரையை
எரித்தால் கண்ணகி.
என் கன்னகிகளே கற்பை
களங்கபடுத்த வருபவனை
எட்டி அவன் ஆண்மையிலே உதைத்துக்கொள்ள
எவ்வளவு நேரம் ஆகும்?
காத்திருக்கிறேன் இந்த செய்திகளை காதில் வாங்க.

ஏன் அம்மா பெருமூச்சி வாங்குகிறாய்
ஒ வெக்கமற்ற வெறிநாய்கள்
நம் வேரறுக்க வந்தனவோ.
இந்நொடி நான் பிறக்க வேண்டும்
உன்னை நெருங்குபவன் முகத்திலே
நான் சிறுநீர் கழித்திட வேண்டும்.

தமிழன் என்றும் தாழ்ந்தவன் அல்ல,
தாழ்த்த நினைப்பவனின்
தலையை எடுக்க வந்தவன்,
என்று அவன் அறியவேண்டும்.
அடேய் அரக்கர்களே உங்கள் தலைகள்
எடுக்கப்படும் ஒருநாள்
கவலையுடன் காத்திருங்கள்.
ஆவலுடன் காத்திருக்கின்றேன் நான்.....

எழுதியவர் : ரா. ராஜநாராயணன் (3-Nov-13, 12:31 pm)
சேர்த்தது : Raj Kumar
பார்வை : 82

மேலே