மனித மிருகங்கள் கவிஞர் இரா இரவி

மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !

இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !

காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !

போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !

காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !

சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !

எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !

ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !

இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !

பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !

இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !

கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !

தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !

ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்கியனோடு ஐக்கியம் ஆனது !

இந்தியாவோ இன்னும் நட்பு நாடு என்கிறது !
ஈனச்சிங்களன் நண்பன் ஈழத்தமிழன் பகைவனா ?

தமிழினப் படுகொலைகள் கண்டும் !
தமிழர்கள் ஊடகங்கள் ஊமையானபோதும் !

தரணிக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய !
சேனல் 4 ஊடகத்திற்கு நன்றிகள் !

இசை பிரியா பேசிய இனிய தமிழே !
இனியவளின் சாவுக்கு காரணமானது !

இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Nov-13, 5:28 pm)
பார்வை : 87

மேலே