நான் தமிழ் படித்தால் உன் காதில் இரத்தமா ஐயகோ
நானும் கவிஞர் ஆகத்தான்
நினைக்கின்றேன்
ஆனால் கடுகளவும்
என் சிந்தையில் தோன்றவில்லை
தமிழின் விந்தைகள்
நானும் பிழையின்றி
எழுதத்தான் நினைக்கின்றேன்
ஆனால் எழுதுவதற்குள்
செத்துப் பிழைகின்றேன்
தமிழை கொலைசெய்கின்றேன்
நானும் தமிழை
நேசிக்கத்தான் நினைக்கின்றேன்
ஆனால் வாசிக்க
கூட தெரியலையே
ஊமையாக உணருகிறேன்
பசியைக் கூட மறக்கிறேன்
தமிழின் ருசியை அறியும்பொழுது
நான் தமிழ் படித்தால்
ஏன் உன் காதில் இரத்தம் வருகிறது
ஐயகோ!!!
இந்த கொடுமையை நினைத்தால்
நித்தமும் நான் செத்து பிழைப்பேனே.......
முடியும்
என்னாலும் முடியும்
ஆங்கிலேயனே நம் தாய் மொழியை
கற்கும் பொழுது
தாய் நாடு
தமிழ் நாட்டில்
பிறந்த என்னால் முடியாத!!!!!!!!