ஜாதிகள் இல்லையடி பாப்பா

கீழென்றும் மேலென்றும்
இல்லை இங்கே ஜாதியிலே
இதைச்சொல்லி நாள்தோறும்
சண்டை எங்கும் வீதியிலே

படைத்தவர் படைப்பிலெல்லாம்
பாரபட்சம் ஏதுமில்லை
உள்ளத்திலே உனக்கெதற்கு
உயர்வு தாழ்வு என்ற நிலை

பிறக்கும் குழந்தையெல்லாம்
அம்மணமாய்த்தான் இருக்கு
ஆடையிலே அற்பனே
எதற்க்குனக்கு ஆனவச்செருக்கு ?

சிந்தும் ரத்தமெல்லாம்
சிகப்பாய் தான் இருக்கு
சிந்தும் இதை நீ உன்
சிந்தையிலே தான் நிறுத்து.

செய்யும் தொழிலதிலே
இழிவென்றெதுவுமில்லை,
இழிவென்று செய்யாவிடில்,
நாறிப்போகும் மனித நிலை.

இருப்பினும்,
கீழென்றும் மேலென்றும்
மனிதன் வகுத்தான் ஜாதியிலே
இதைச்சொல்லி நாள்தோறும்
சிந்துகிறான் ரத்தம் வீதியிலே....

எழுதியவர் : Bala17 (5-Nov-13, 12:32 pm)
Tanglish : jathi
பார்வை : 902

மேலே