அன்னையும் நீயே
நான் பிறந்த
சில மாதங்களிலே
என் அன்னையை
நான் இழந்துவிட்டேன்...
அதற்கு பதிலாக
கடவுள் எனக்கு
ஒரு நண்பனை பரிசளித்தான்...
விழிபோல என்னை
காக்கின்றான்...
எனக்கொரு வலி வரும்முன்
அவன் துடிக்கின்றான்...
அவன் நண்பனல்ல
என் அன்னை...!