நான் அறிந்த இயற்கை

சுற்றி பாரடா மனிதா.....
இவ்வியற்கையும் ஒரு ஆசான் தான்....
இவை சொல்லும் பாடங்களை,
உணரா மனிதர்கள் நாம்....!!
கடலினை பார் மனிதா...
கஜினி முகமதுவாய்,
கரை தொட வந்து,
தோற்று போனாலும்,
நிறுத்தவில்லை முயற்சிப்பதை....!!
காற்றை உணர் மனிதா...
புன்னகையோ புயலோ,
ஏற்றத்தாழ்வு பார்த்து தன்னை தருவதில்லை...!!
மழைத்துளியினை பார் மனிதா....
எவ்வளவு தூரத்திலிருந்து விழுந்தாலும்,
தூய்மையில் மாற்றம் காணவில்லை...!!
மண்ணை பார் மனிதா...
எச்சில் துப்பினாலும்,
ஏறி மிதித்தாலும்,
சுமப்பதை நிறுத்தவில்லை...!!
அசதியென்று நம் இதயம்,
ஒருபோதும் நின்றதில்லை மனிதா,
அப்படி நின்றால் இவ்வுலகில் நாம் நிற்பதில்லை...!!
சுற்றும் பூமி...
சுடும் சூரியன்...
சில்லென சந்திரன்...
இவை இயங்க மறுத்தால் நம் நிலைமை என்ன..?
இது தான் வாழ்க்கை மனிதா....
கடிகார முள்ளாய் ஓடு,
ஓர் நிமிடமும் நிலை இல்லை,
அதற்குள் உன் பெயர் நிலையாய் நிற்க
முயற்சி செய் மனிதா...!
"மரமாய் நீ நிற்க வேண்டுமென்றால்
விதையாய் நீ மண்ணுடன் முட்டி மோத வேண்டும்"
முயற்சிகள் இன்றி மாலைகள் வராது,
முயற்சிக்க தவறினால்,
உனக்கு வாழ்க்கை என்று ஒன்றே இருக்காது...
"உன் விழியிரண்டில் பொசிக்கிடு சோம்பலை
உன் விரல் பத்தில் அடக்கிடு இவ்வுலகை"...!!
உள ஊனம் கொண்டு,
முடியாது இயலாது என்று,
முடங்கி விடாதே உன்னுள்ளே...
வெளியில் வந்தால் தான்,
நிழலும் நிற்கும் உன் பின்னால்....!!!