அறுவை சிகிச்சை அரங்க வாசலில்
அறுவை சிகிச்சை அரங்க வாசலில்
அமரும் இருக்கையில் இருப்பு கொள்ளாது
அலைமோதும் இதயம் படபடவென துடிக்க
அடங்கா மனதில் எண்ணங்கள் கொந்தளிக்க
அனாவசிய கற்பனைகள் ஆர்ப்பரித்து எழ
அச்சத்தால் குலைநடுங்கும் கொடூர தருணம்
அசையா உள்ளமும் ஆடிப் போகும்
அபயம் நீயென குலதெய்வம் துதிக்கும் !
மனிதர்க்கு விதவிதமாய் இத்தனை வியாதியா
மனதில் திகிலும் தஞ்சம் அடையும்
மருத்துவர் வரவில் துடிக்கும் நெஞ்சம்
மடைதிறந்த வெள்ளமாய் விழியும் பெருகும் !
கவலை விடுக நலமே விளையும்
கண்ணீர் துடைக்க மருத்துவர் கூற
கலங்கிய மனமும் சாந்தம் கொள்ளும்
கடவுளுக்கு நன்றி உள்ளம் சொல்லும் ....!!