நீ ஈரமானவள்...

நான் சிலநேரம்
உன்னை...
தவறாக நினைத்து விடுகிறேன்.
உன் இதயத்தில்
ஈரமில்லை என்பது போல்.

நீ அப்படியில்லை.
இப்போது உணருகிறேன்.

சில வருடம்
செலவழித்து-
என் பெயரை சிறு சிறு
கோடுகளாய் கிழித்தும்
தடம் தெரியாமல்
தள்ளாடும் உன் இதயத்தில்
தண்ணீரை தவிர
வேறிருக்க வாய்ப்பில்லை போலும்!

எழுதியவர் : செந்தில்நாதன்.கே (19-Jan-11, 6:38 pm)
சேர்த்தது : senthilnathan.k
பார்வை : 443

மேலே