வேண்டும் வேண்டும்

புகை
இல்லாத புவி வேண்டும்
ஈகை குணமுள்ள
இவ்வுலகம் வேண்டும்
பகை இல்லாத
பண்பாடு வேண்டும்
லஞ்சம் இல்லாத
லட்சியம் வேண்டும்
காமம் இல்லாத
காதல் வேண்டும்
மது இல்லாத
மனிதன் வேண்டும்
கொள்ளை இல்லாத
கொள்கை வேண்டும்
வேண்டும் வேண்டும்
நிம்மதியுள்ள நித்திரை வேண்டும்
இது நான் மட்டும்
படும் பாடல்ல
ஒவ்வொரு மனிதனின்
ஆதங்கத்தின் வெளிப்பாடு!!!

எழுதியவர் : manoj (19-Jan-11, 8:01 pm)
Tanglish : vENtum vENtum
பார்வை : 490

மேலே