நினைவுகள்

அழகாய் வந்து ஆழமாய் பதிந்த
அன்பின் சுவடுகள் ..
நெஞ்சை தொட்டு தொடரும்
தொலையாத பொக்கிஷங்கள்...
உதிரத்தை தொட்டோடும்
தித்திப்பின் மதுரம்..
மனதால் மனதில் படிந்த
புன்னகையின் அடையாளம்..
கண்ணில் நீர் தரும்
வலியாக ஒருபொழுது,
கண்ணின் நீரை துடைக்கும்
விரலாய் பலபொழுது..
நேசிப்பில் கடந்த தருணம்
சுவாசம் வாழும் வரை
தொடரும் பயணம்...
எங்கோ என்றோ
நிகழ்ந்த நிகழ்வு ,
எந்நாளும் தரும் நெகிழ்வு ....
மறைக்க முடியாதது
மறக்க முடியாதது
மறைந்தாலும்
மடிந்து போகாதது...
பிரிக்க இயலாதது ,
நெஞ்சை விட்டு
பறிக்க இயலாதது...
பாசத்தின் துடிப்பில் விளைந்தது,
இதய சுவாசத்தின்
துடிப்பாய் வாழ்வது...

எழுதியவர் : kk (10-Nov-13, 5:02 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே