அழகு

கவிதைக்கு அழகு கற்பனை
அழகுக்கே கற்பனை நிஜம்

நல்லதும் சிறந்ததுமே
நானிலத்தில் அழகென்றால்...
நான் அழகு
நீங்கள் அழகு
நலம்பாடும்
நண்பர்கள் அழகு...
என் பள்ளி அழகு
கல்வி அழகு
கற்றுத்தரும்
ஆசிரியர் அழகு...
தாய் அழகு
தந்தை அழகு
தாரணி போற்றும்
தமிழ் அழகு...

இனியொரு அழகும்
உண்டென்றால்
அதுஎன் கவியின் கருத்தழகு.

எழுதியவர் : ஸ்ரீனிவாச ரமணன், நெரிஞ்சி (19-Jan-11, 10:42 pm)
சேர்த்தது : Ramana
Tanglish : alagu
பார்வை : 463

மேலே