மனதை மயக்கும் மழலை
கோடானகோடி துயரங்கள்
கண்டு துவண்டுபோய்
அமருகையில் கிடைத்திடும்
ஆறுதல்கள் அருகில்
வரும் மழலையின்
````அழகிய சிரிப்பில்````
மண்டிக்கிடக்கும் மனதின்
வலிகளுக்கு மத்தியில்
எழுவதற்கு முடியாமல்
மூளையில் முடங்கிட
மாறிப்போகும் அத்துனையும்
அருகில் வரும் மழலையின்
````தித்திக்கும் சிரிப்பில்````
உடன் யாருமின்றி
தனிமையில் தன்னந்தனியாய்
நின்றிருக்க, மனதிற்கு
அத்துனையும் உறவாகும்
அருகில் வரும்
அறியா மழலையின்
````அன்பு சிரிப்பில்````
ஈடுகொடுக்க முடியா
இழப்புகளால் இடிந்துப்போய்
இன்பமற்று இருக்கையிலும்
இன்பமிருப்போதுபோல்
உணரவைக்கும் அருகில்
வரும் மழலையின்
````இன்பச் சிரிப்பில்````
வாழ்வை வெறுத்து
துன்பங்களில் துவண்டு
கவலைகளில் கரைந்து
பகையில் பார்க்காது
தனிமையில் தவழ்ந்தாலும்
அனைத்தும் மறக்கக் செய்யும்
முத்துச்சிதறலாய் உதிரும் சிரிப்பில்
`````மனதை மயக்கும் மழலை`````
...கவியாழினி...