நட்பாலே

விண்ணிலே வானவில்லையே
வளைத்து போட்டதாய்
ஓர் உணர்வு!
எண்ணலூட்டலில்
ஏகாந்தமே கைவசம்...!
உணர்வுப் பரிமாறலில்
ஓர் உத்தம
நட்புக்கரம்...!
இறுகிப்போன
மன உணர்வுகள்
தளர்ந்து போயின..!
நீட்டிய கரம்
நீட்சியடைய
உய்வடைய
வழி கோலியது..!
யாவுமே
என்னுள் மட்டுமா..?
என
எண்ண இருப்பில்
எழுச்சியாய்
ஓர் கேள்வி...!
மறுமுனை பதில்
நட்புக்கரத்தை
தன்
சொந்தக்கரமாக்க
முனையும்
யாசகம் உணர்த்திற்று....
தன்னுள்ளே எனை
ஆள்வதன் யாசகம்
சொல்லிற்று....!
மௌனங் கூட
இந்நிலைதனில்
மரணத்தை எட்டிப்
பார்க்கலாயிற்று...!
புரியாத பயணமா?
புரியாத எதிர் துருவமா...?
எதுவும் புரிய
மறுக்கும்
உன்னிடம்
எதையும்
பறைசாற்ற என்னிடம்
வலுவில்லை!
புரிந்திடு நண்பனே
நட்புக்கு மட்டுமே
என்றும் நீளும்
எ(ந்த)ன் கரம்....!