வாழ்க்கை

உண்மைய உரக்க சொன்னா
ஊருலகம் நம்ப மாட்டிக்கி!!!

பொய்ய பொருந்த சொன்னா
போக்கிரி பட்டம்தான் மிச்சம்!!!

புண்ணாக்கு கடையில
புடலங்கா கேட்ட கதையா
சிரிப்பா சிரிக்குது
சிலரு பொழப்பு!!!

சிந்திக்க விஷயம் சொன்னா
சிரிக்கிறாய்ங்க
சிரிக்கிற மாதிரி சொன்னா
சிந்திக்கிறாய்ங்க!!!

எமபயபுள்ள
ஏக்கமா பாக்குறான்யா!!!

எம்மனுஷ பய புள்ளகள
எமபயபுள்ள
எடுத்துட்டு போகும் போது
சிரிக்கவும் தெரியல
சிந்திக்கவும் தெரியல!!!

எழுதியவர் : சங்கர Narayanan (20-Jan-11, 3:10 pm)
சேர்த்தது : Sankara Narayanan
பார்வை : 612

மேலே