பாதைகளின் பயணங்கள்
அடர்ந்த
காய்ச்சலுக்குள் நுழைந்து ..
சில வலிகளுடன் .....
கழிந்த பொழுதுகளில்
உணரப்படுகின்றன
தாயன்பின் ஒத்தடங்கள்
...................
தனிமையில்
சிறைப்படுகையில்
காலத்தின் இடுக்குகளுக்கிடையில்
வந்து விழுகின்றன பூக்கள் .
மனைவியின் நேசங்களாய்....
.....................................................................
நீண்ட பாலையில்...
சோகத்தின் வெப்பக்காற்றுகள்
கடந்து போயின
நட்பின் நிழல்களில் ..
............................................................
சூழும் இருட்டுக்குள்
தட்டு தடுமாறி
தடம் பதித்து
தடம் பதித்து
தேடி பெறுகிறேன்
தந்தையின் அனுபவ பேரொளியை
...............................................................................
சாதனை முகடுகளின்
உச்சியில் நின்று
வெற்றியை உரக்க
உச்சரிக்கிறேன்
எதிரொலியாக ஒலிக்கிறது
என்றோ பயிற்றுவித்த
ஆசிரியரின் அதட்டல் .
...................................................
மகிழ்ச்சியின்
உச்சிக்கொம்புகளை
பற்றும்போதெல்லாம்
பிசின்களாக..கிளைகளுடன்
ஒட்டிக்கொள்கின்றன
உடன்பிறப்புகளின் புன்னகைகள் .
................................................................
ஒரு தொப்புள் கொடியறுப்பில்
வேட்டிவிடப்பட்ட கிளைகளாக
பரவியே விழுகின்றன
உறவெனும் விழுதுகள் .....