ஓர் ஆட்டுக்குட்டியின் காதல்
ஓர் இடையனின் பின்னால்
தலையசைத்த படி செல்லும்
ஆட்டுக்குட்டியைப் போலத் தான்
உன் பின்னால் சுற்றுகிறது
என் காதல்....
எப்போதும் பலி கொடுக்கப்படலாம்
என்ற போதிலும்
இடையனின் மீதான
நம்பிக்கை ஒரு போதும்
சந்தேகத்துக்கு இடமானதில்லை...
உன்னதமானது தான்
உயிர் துறப்பதும்...
கருவேல முள் தைத்து
கால் நொண்டி நடந்த காலங்களில்
கழுத்தில் தூக்கி சுமந்த
இடையன் உனக்காக...