மாலுமிவித்தொன்றின் அறிமுகம்
நானொரு பன்னாட்டு
நிறுவனன் ...!!!
அழகாய் அரங்கமைப்பேன்..
அதனுள் ஆள் புதையும்
ஆசனம் வைப்பேன்...!!
துரோனாச்சாரிகளை
துரத்திவிட்டு
அபிமன்யூக்களுக்கே இங்கு
அடைக்கலம்....!
வற்றிய குளங்கள்
செப்பனிடத் தவிர்த்து
வழிந்து பெருகும்
ஊற்றுகளில் மட்டுமே
உறிஞ்சித் திளைப்பேன்..!!
நடுநிசிகளிலும் இலக்குகள்
துரத்துவேன்... இங்கு
இரவென்றால் எனக்கென்ன..?
என் தேசம்
இப்பொழுதுதான் சூரியனால்
சுகப்படும்...!!!
எனக்கு பாரதியை
பிடிக்கும்.. நையப்புடையென
மொழிந்து
போயிருக்கிறதற்காக...
அழுத்தம் விதைப்பேன்
மூளைக்குள்.. அதனினும்
மேலாய்..
கொழுப்பு வளர்ப்பேன்
மூலங்களுக்குள்.....!!
சாறு பிழிந்து
துளிகள் புகட்டுவேன்..
மடங்கி வீழ்ந்தால்
டாலர் போர்த்துவேன்..!!!
அப்படியா...? இங்கு
டாலர்களுக்கு
வட்ட உலோகமென்னும்
நெற்றியொட்டு
வழக்குமொழி இருக்கிறதாமே...!?