குழந்தை துளிப்பா
குழந்தை துளிப்பா
குழந்தைகள் தினமென்று
வாழ்த்த தகுதியுண்டோ??
குழந்தை மனதைக் கொன்று...
.......
கூலித் தொழிலாளி
ஆக்கப்படும் குழந்தை
பிஞ்சிலே பழுக்கும் சீக்காளி...
........
குப்பையில் எறியப்பட்டு
அனாதையாகும் மழலை வளருமோ
ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு...
......
உரிமை மறுக்கப்படும்
குழந்தை மனதில்
உறவுகள் வெறுக்கப்படும்...
......
விருப்பத்திற்கு மதிப்பளிக்காது
வளர்க்கப்படும் பிள்ளையின்
ஒழுக்க வளர்ச்சி திருப்தியளிக்காது...
.....
கடமை தவறிய நற்றோர்
குழந்தையைக் குழந்தையாய்
வளர விடாத கற்றோர்
.....
குழந்தைகள் தினமென்று
வாழ்த்த தகுதியுண்டோ??
குழந்தை மனதைக் கொன்று...
.....நாகினி