எங்கிருந்து வந்தாயோ நீ

அளவுச்சிரிப்பும்
அர்த்தப்பார்வையும்...
அழகாய் ஆடும் கம்மலும்
உச்சியெடுக்கா பின்னலும்
உயிரை உருக்கும் பேச்சும்...
மின்னல் பார்வையும்
மிளிரும் மூக்குத்தியும்

சொல் நீ...
உனை விட யார் அழகு...

காலைக்கும்...
மாலைக்குமாய்...
காத்திருக்கிறேன்...
கன்னி உன்னுடன்
கதைப்பதற்க்கு...

ஆயிரம் கவலையுடன்
ஆரம்பித்தால், உன் பேச்சில்
அத்தனையும் பறக்கிறது
கருவியில் சிக்கிய பஞ்சாய்...

எங்கிருந்து வந்தாயோ நீ...
என் இதயத்தை இறகாக்க...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (16-Nov-13, 1:12 am)
பார்வை : 484

மேலே