புது உறவு
கற்பனைகள்
சிகரைத் தொட்ட
போதிலும்
கனவிலுன் தோன்றாத
சிறந்த உறவு
முதலில் உன்
வரவை
எதிர்பார்க்காவிடினும்
இப்போது
உன்னை எப்போது
காண்பேன் என
ஏங்கி நிற்கிறது
என் உள்ளம்.....
தினம் தினம்
உன் கற்பனைகள்
இருந்த போதிலும்
கனவிலும் நீதான்
தோன்றுகிறாய்...
என்ன அதிசயம்
உன் அன்பு!
புரியவில்லை...
இது கனவா
நனவா என்று..
என் புது உறவே...
உன்னோடு இருந்த
சில நிமடங்கள்
என் வாழ்வில்
மறக்க முடியாத
நிமடங்களாக மாறிவிட்டது..
எனக்குள்
நீ மறைந்திருக்கிறாய்
என்பது
மறுக்கமுடியாத
நிஜம்
எங்கே நீ
எப்போது வருவாய்
காத்திருப்பேன்
அங்கே...
உன் வருகைக்காய்...