இயற்கைக்குத் திரை

புல்லோடு பனி தின்னும்
வெள்ளாடு மேயுங்காடு

உச்சி மலையோடு
கொஞ்சிப்பேசும் பஞ்சு மேகம்..!

எந்தத்தூரிகைக்கும் சொந்தமில்லா
ஓவியத்தைக் காட்டிக்காட்டிப்
பறக்குஞ்சிறு பட்டாம்பூச்சி ..

வெள்ளைக்குள் ஒளிந்தோடும்
வர்ணமேழை வளைத்து
வில்லாக்குமோர் நீர்த்துளி...!

உருகி ஒளிபெருக்கும்
மெழுகின் தியாகத்திற்கு
கதியாகும் விட்டில்கள் ..!

கரையான் கட்டுமதன்
வீட்டில் சீராய்க்கலவை
சுமக்கும் சித்தாள்கள் ..!

பொட்டல்காட்டில் மரத்தின்
கதவை டொக்டொக்கும்
கொத்தியின் கொண்டையழகு ..!

சகுனமோ சத்தமோ
வெறிச்சோடிய இரவின்
விட்டத்துப் பல்லி...

சிலுசிலுக்கும் மயிலிறகில்
மினு மினுக்கும்
வண்ண வளையங்கள் ..

ஆஹா ..
என்னருகிலேயே
உலகம் எத்தனை அழகு ..

தேடுகிறேன்...
விண்டோஸ் -8 திரை திறந்து ....!

எழுதியவர் : நிலாநேசி (16-Nov-13, 11:37 am)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே