வீழ்வது அல்ல, மற்று வாழ்வதே வாழ்க்கை

கோடி வெளிச்சம் குடியேற
தடுத்து விட்டு,
கோபுர நிழலில் குடிசை என
கொக்கரிக்கும் இனமே,

வீழ்வேன் என நினைத்தாயோ?
வீறு கொண்டு எழுவேன் நான்...

புழுக்கள் உண்ண கோழி அல்ல நான்,
எனை விரும்பி புழுக்கள் புசிக்கட்டும்....

நான் மடிந்த பிறகு!

சரவணன்

எழுதியவர் : சரவணன் வீரப்பன் (16-Nov-13, 11:43 am)
சேர்த்தது : Saravanan VR
பார்வை : 101

மேலே