இந்தியனே என்கனவே

இந்தியனே என்கனவே
இளந்திரையேக் கண்ணுறங்கு.
முந்தியனின் கற்பனையே
முழுநிலவேக் கண்ணுறங்கு.
பிந்தி வரும் அமைதிநீயே
என்துறையேக் கண்ணுறங்கு.
எந்திரனே எழுதொழிலே
என்பயனேக் கண்ணுறங்கு.
சந்திரனே சமத்துவமே
சாதிக்கக் கண்ணுறங்கு.
விந்தியமே வீரமேநீ
வினைவெல்லக் கண்ணுறங்கு.
சந்தியானே வந்தனனே
சரித்திரமேக் கண்ணுறங்கு.
என்திறமே எழுகதிரே
எதிர்காலமேக் கண்ணுறங்கு.
மென்கொடியே வன்கடிவே
நன்மைநீயேக் கண்ணுறங்கு.
கண்ணொளியேக் கலங்கரையே
நன்வழியேக் கண்ணுறங்கு.
நன்விளைவே சன்முறையே
திண்பொறையேக் கண்ணுறங்கு.
பொன்னிறையேப் பொதுமறையே
புதுமையேநீக் கண்ணுறங்கு.
தண்மொழியேப் பண்பொலிவே
இன்பமேக் கண்ணுறங்கு.
விண்ணுயர்வே விளைநிலமே
விடியலேக் கண்ணுறங்கு.
தன்னியல்பே இயற்கையே
தருவேநீக் கண்ணுறங்கு.
சின்னமேநீச் சீர்மையே
சிங்காரநேக் கண்ணுறங்கு.
கண்மணியேக் கண்மணியே
கனவுகளைக் கண்டுறங்கு
எண்ணியதை உன்னாளில்
இய்ற்றிடவேக் கண்ணுறங்கு.
கொ.பெ.பி.அய்யா.