என்னுள்ளே
அலையாய் வந்தவள் நீ
எனை
அன்பால் கரைத்தவள் நீ...
நிலவாய் வந்தவள் நீ
என்னுள்
நினைவை விதைத்தவள் நீ...
முகிலாய் வந்தவள் நீ
என்னுள்
முதலாய் ஆனவள் நீ...
மழையாய் வந்தவள் நீ
என்னுள்
மகிழ்வை நிறைத்தவள் நீ...
மலராய் மலர்ந்தவள் நீ
என்னுள்
மாற்றம் தந்தவள் நீ...
சிறகாய் விரிந்தவள் நீ
எந்தன்
சிந்தை கவர்ந்தவள் நீ...
கனவாய் வந்தவள் நீ
எந்தன்
கருப்பொருளானவள் நீ...
வானில் வந்தவள் நீ
எனக்கு
வசந்தம் தந்தவள் நீ...